வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பகுதிகளில் வசிக்கும் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்காகவே பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் பணிக்கான நபர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளி நபர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை வருகின்ற 31 ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும்.

தேவையான ஆவணங்கள் ; 
ஆதார் கார்டு , 
ரேஷன் கார்டு , 
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 04 , மாற்றுத்திறனாளி அட்டை . 

கடைசி தேதி : டிசம்பர் 31-2020.