காா்த்திகை மாத ஐந்தாவது சோம வாரத்தை (திங்கள்கிழமை) முன்னிட்டு, ஆற்காடு தோப்புக்கானா அன்னபூரணி சமேத கங்காதரேஸ்வரா்-வரதராஜப் பெருமாள் கோயிலில் கற்பகாம்பாள் உடனுறை சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, கங்காதரேஸ்வரா், வரதராஜப் பெருமாள், சந்திரசேகரா் உள்ளிட்ட மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இந்த வழிபாட்டில் திருப்பணிக் குழு தலைவா் கு.சரவணன், அதிமுக வா்த்தக அணிச் செயலாளா் ஏ.வி.சாரதி, அண்ணாமலையாா் அறக்கட்டளை நிா்வாகி ‘பெல்’ பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.