திருப்பத்தூர் அருகே ஓ ஏபி வாங்கி சென்ற முதியவர் இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் .
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கஜல் நாயக்கம்பட்டி அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் பெருமாள் ( 80 ) . 

இவருக்கு சின்ன பாப்பா என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் , மூன்று ஆண்கள் உட்பட ஐந்து பிள்ளைகள் உள்ளனர் . சமீப நாட்களுக்கு முன்பு மனைவி சின்ன பாப்பா இறந்து விட்ட சூழ்நிலையில் பெருமாள் மாதந்தோறும் வரும் ஓ ஏ பி பணத்தை வாங்கிக்கொண்டு கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கனூர் பகுதியிலுள்ள தன்னுடைய மகள் மாது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது திருப்பத்தூரை நோக்கி எதிர்திசையில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டிக் கொண்டு வந்த ஸ்கூட்டி பெப் இரண்டு சக்கர வாகனம் மோதியதில் விபத்தில் சிக்கியுள்ளார் .

விபத்து நடந்த இடத்தில் பின் பக்கமாக சரிந்து விழுந்த பெருமாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல்துறை அதிகாரி உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.