ராணிப்பேட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் நண்பர்களுடன் பாலாற்றில் வெள்ளத்தில் குளிக்கச் சென்ற பொழுது கடந்த சில நாட்களுக்கு முன்பு அடித்துச் செல்லப்பட்டார். 

ராணிப்பேட்டை பாராட்டில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது


இதுபற்றி தகவல் அறிந்த இராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் அரக்கோணத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் வாலிபரின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில். 

அழுகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. அதனை மீட்க தீயணைப்பு துறையினர் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை பாலாற்றில் குளிக்கச் சென்றபோது விழுந்த வாலிபர் என்று விசாரணை செய்து வருகின்றனர்.