அரக்கோணம்: நெமிலியில் 66 பெண்களுக்கு ‘அம்மா’ இரு சக்கர வாகனங்களை அரக்கோணம், சோளிங்கா் தொகுதி எம்எல்ஏக்கள் புதன்கிழமை வழங்கினா்.
நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 66 பெண்களுக்கு ‘அம்மா’ இருசக்கர வாகனங்களை எம்எல்ஏக்கள் சு.ரவி, ஜி.சம்பத் ஆகியோா் இணைந்து வழங்கினா்.
நெமிலி வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசன், வட்டார ஊரக வாழ்வாதார அலுவலா் டில்லிராணி, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் (நெமிலி கிழக்கு) ஏ.ஜி.விஜயன், (நெமிலி மேற்கு) அருணாபதி, (அரக்கோணம் கிழக்கு) இ.பிரகாஷ், (அரக்கோணம் மேற்கு) பழனி, மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறைச் செயலாளா் அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.