சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் கார்த்திகை மாத திருவிழா நிறைவு நாள் இன்று இதையொட்டி திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
மேலும் சோளிங்கர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சாமி திருக்கோவில் பெரிய மலை உள்ளது வருடம் வருடம் கார்த்திகை மாதம் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதை எடுத்து , கொரோனா வைரஸ் காரணமாக மாவட்ட ஆட்சியர் சில கட்டுப்பாடுகளுடன் சுவாமியை தரிசிக்க அனுமதி அளித்தார்.
அதையடுத்து கார்த்திகை மாதம் நிறைவு விழாவான இன்று திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பாக சுவாமியை தரிசிக்க முக கவசம் அணிந்து சனிடேஷன் தெளித்து பாதுகாப்பாக சுவாமியை வழிபட்டனர்.