ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை 
திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவிகாபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து சிலை மற்றும் பூஜை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது . 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர் .