தொடர் கனமழை காரணமாக ஏரிக்கரை சாலையில் மண் சரிவு, வாகன ஓட்டிகள் அவதி.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை ஏரி ஓரம் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏரிக்கரை சாலையில் 10 அடி தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர், உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் உரிய கவனம் செலுத்தி மண்சரிவு சீர்செய்து சாலையை பொதுமக்களுக்கு முழு பயன்பாட்டிற்கு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.