ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள நாராயணபுரம் கிராமம் , பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் ( 38 ) . 
இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தபோது மனநிலை பாதிக்கப்பட்டு இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால் நாராயணபுரம் கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்து வாலாஜா , சென்னை போன்ற பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் அருகிலிருந்த பழைய ஓட்டு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் . இதுபற்றி மகாலிங்கம் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் வினோத்ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ்குமார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.