ராணிப்பேட்டை: திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண பக்தர்கள் ஆன்லைனில் முன் அனுமதி பெற வேண்டும் - ஆட்சியர்
ராணிப்பேட்டை அருகே திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தை காண பக்தர்கள் ஆன்லைனில் முன் அனுமதி பெற்று வர வேண்டும் ஆட்சியர் தகவல்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற் கடல் பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீதிருப்பாற்கடல் பிரசன்ன பெருமாள் ஆலயம் உள்ளது, இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தை காண பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு கோரனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமுலில் உள்ள காரணத்தினால் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தை காண வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன் அனுமதி பெற்று பின்னர் தரிசனத்திற்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Link : https://tnhrce.gov.in/eservices/dharshanbooking.php?tid=1278&scode=6&sscode=7&target_type=1&fbclid=IwAR1_IJw9gRWmV0molWYynUTNLxWXnnI9Cn1kFtjxmm8Tdy7Wo0MLrmmKG8k