ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தமாக 230 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது, மாவட்ட ஆட்சித் தலைவர் புஷ்பராஜ் அவர்கள் தலைமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடன் உதவி, நிதி உதவி, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, காவல்துறை பாதுகாப்பு மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட 230 மனுக்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் வழங்கினார்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்களை வழங்கி உடனடியாக மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவிட்டனர். 

இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இளவரசி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.