ராணிப்பேட்டை: சிப்காட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 8 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன . இந்த நிலையில் இது தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் சென்னையை சேர்ந்த அமரன் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ சீமான் என்பது தெரியவந்தது.
 
இதனை அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் பதுங்கியிருந்த ராஜசீமான் மற்றும் அமரன் ஆகியோரை காவல் ஆய்வாளர் சாலமன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர் . மேலும் அவர்கள் கொள்ளையடித்த 8 சவரன் தங்க நகை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் செயின் பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.