இலங்கை அருகே உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . 
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று ( 16 - ம் தேதி ) தஞ்சாவூர் , திருவாரூர் , மயிலாடுதுறை , நாகப்பட்டினம் , புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் , ஏனைய கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் , உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது . 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் , நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது . மேலும் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல இன்று மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .