தமிழக அரசு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி , 

ஒரு கிலோ சர்க்கரை , 
ஒரு முழுக் கரும்பு , 
20 கிராம் முந்திரி , 
20 கிராம் திராட்சை , 
5 கிராம் ஏலக்காய் 

உள்ளடக்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 2500 ரொக்கப் பணம் வழங்குவதாக அறிவித்தது.
இதையடுத்து கடந்த 26 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் வேலூர் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்நிலையில் டோக்கன் வினியோகம் இன்றுடன் நிறைவடைகின்ற காரணத்தினால் டோக்கன் வாங்காத பொதுமக்கள் டோக்கன் வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதி முதல் 12 ம் தேதி வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .