விவசாயிகளின் காத்திருப்பு போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிப்பு.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பாக காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. 
இந்த நிலையில் விவசாயிகளின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலக சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் போராட்டம் அளவுக்கு அதிகமாக செல்லும் பொழுது அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது. காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.