ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி மனு
வேலூர் சேர்க்காடு பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதில் ஆளுநர் பன்வாரிலால் விரைந்து முடிவெடுக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி ஓய்வுபெற்ற பேராசிரியை முத்துலெட்சமி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார் . விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கச் செப் .16 - ல் அவசர சட்டம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது .