வேலூரில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையர் சங்கரன் நேரில் ஆய்வு செய்தார். 
இதுகுறித்து , செய்தியாளர்களிடம் சங்கரன் கூறும்போது , " புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன . புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன . அதேநேரத்தில் , நவீன வசதிகளுடன் தரமான பேருந்து நிலையமாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கிறோம் . கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வரும் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குப் புதிய பேருந்து நிலையம் கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருகிறோம் " என்றார் . வேலூர் நகரம் 4 0 71 விருப்பு வெறுப்பு கருத்து ஷேர் பகிர்