ராணிப்பேட்டை: தொடர் தற்கொலை முயற்சி சம்பவங்களால் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் சோதனை தீவிரம்.
தொடர் தற்கொலை முயற்சி சம்பவங்களால் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு வரும் பொதுமக்களிடம் சோதனையை தீவிரபடுத்திய காவல்துறையினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது, கடந்த வாரம் மற்றும் அதற்கு முன்னர் வாரங்களில் மனு அளிக்க வந்தவர்கள் தங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் சோதனையை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
 அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர், அவர்கலின் பைஉள்ளிட்ட கொண்டு வரும் பொருட்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய பிறகே அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.