தமிழகத்தில் வரும் 27 - ம் தேதி முதல் , லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர் . 
இதற்கு , அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் , சரக்கு வாகனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது . தமிழகத்தில் , டீசல் மீதான மாநில அரசின் , ' வாட் வரி , வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி , ஜி.பி.எஸ் நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் , 27 ம் தேதி முதல் , சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் , காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் . 

இது குறித்து , அகில இந்திய மோட்டார் காங் . , நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னகேசவன் மற்றும் , மாநில லாரி உரிமையாளர் சம்மேளன பொருளாளர் தனராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும் போது , கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் , லாரி உரிமையாளர்கள் , டிரைவர்கள் , கிளீனர்கள் என அனைவரும் உயிரை பணயம் வைத்து பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் . ஆனால் , பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் , பல வகையில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் , சோதனை என்ற பெயரில் , அதிகாரிகள் அதிக அபராதம் விதிக்கின்றனர் . 

கடுமையாக உழைத்தும் , அதற்கு உண்டான பலன் கிடைக்வில்லை , எனவே , எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை , திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் தொடரும் என்றனர் . இதனால் , வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் , பஸ் உள்ளிட்ட பயணியர் வாகனங்களை இயங்காது . இதன் காரணாக , காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் விலை கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது .