தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வாங்குவதற்காக ராணிப்பேட்டை வாரச்சந்தையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள் . ஏராளமானோர் குவிந்தனர் . 

தமிழகத்தில் கிராமங்களில் வாழும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள் கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு ஆடுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன . 

இதற்கான ஆடுகள் அனைத்தும் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன . அதன்படி 2020 21 ஆம் ஆண்டுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க ராணிப்பேட்டை வாரச்சந்தையில் கால்நடை பராமரிப்பு துறையில் மருத்துவர் மேற்பார்வையில் ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது .