ராணிப்பேட்டை , மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகமாகவேலை வாய்ப்பை வழங்கிய ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் சேவையை பாராட்டி தமிழக அரசு 2019 ம் ஆண்டிற்கான விருது , தங்கபதக்கத்தை பெல் நிறுவனத்திற்கு வழங்கி கவுரவித்துள்ளது . இந்த விருதுக்கான நுழைவுகளை மாற்றுத்திறனாளிகள் வாரியம் கேட்டுகொண்டது . 
இந்த விருதை கடந்த டிசம்பர் 21 ம் தேதி அன்று | தமிழக அரசு தலைமைச்செயலகத்தில் நடந்த விழா வில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு அமைச்சர் வி.சரோஜா முன்னிலை யில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பெல் நிறு வனத்திற்கு வழங்கினார்.

இதனை பெல் நிறுவனத்தின் சார் பாக கூடுதல் பொது மேலாளர் ( உற்பத்தி ) ராஜூ , துணைபொது மேலாளர் ( ஆரோக்கியம் பாதுகாப்பு சுற்றுச் சூழல் மற்றும் உற்பத்தி மேலாண்மை சேவை ) சோமநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முதல் முறையாக இந்த விருதினை ராணிப்பேட்டை பெல் நிறுவனம் பெற்றுள்ளது . இந்த தருணத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்பட பெல் நிறுவனம் மீண்டும் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .