கொரோனா பெருந்தொற்றானது முதல் அலை , இரண்டாம் அலை , உருமாற்றம் என அடுத்தடுத்த பரிமாணங்களை எடுத்து உலகம் முழுவதும் கதிகலங்கவைத்து வருகிறது . 

இந்த வைரசின் தாக்கமே இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில் , தற்போது புதிய நுண்ணியிரியால் ஆபத்து ஏற்படும் நிலை ஒன்று அமெரிக்காவில் உருவாகியுள்ளது , அதாவது , முதன்முதலாக அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் , மூளையை உண்ணும் அமீபா நுண்ணுயிரியால் தாக்கப்பட்டு , 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான் . உயிரிழந்த சிறுவனின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அதையடுத்து இதுமட்டுமல்லாமல் நகரத்தின் பிற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது . 

தண்ணீர் மூலம் பரவும் இந்த நுண்ணியிரி தொற்று மனிதர்களின் மூக்குவழியாக மூளையை அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது . இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் , ஒற்றைத் தலைவலி , கழுத்து வலி , வாந்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் . 

மேலும் கோமா நிலை , பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு ஏற்படுத்தி இறுதியில் மரணம் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்போது அமெரிக்காவில் பல இடங்களில் இந்த கொடிய பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் . 

இதுகுறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ( CDC ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி , கொடிய வைரஸின் பாதிப்புகள் இப்போது அதிக அளவில் பரவி , மத்திய மேற்கு மாநிலங்களை நோக்கி நகர்கின்றன என்ற செய்தி உலகம் முழுக்க அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .