வேலூரில் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.. ! பொன்னை, பாலாற்றில் இரு கரையும் தொட்டு ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.

வேலூர் மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சித்தூர் மாவட்டம் கலவகுண்டா , அணையிலிருந்து சுமார் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது . 


இதனால் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை மற்றும் பாலாற்றில் இரு கரையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது . 


பொன்னை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காட்பாடி மற்றும் பொன்னை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரிகள் நிரம்பியுள்ளன . நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது .