வாலாஜா: 2 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி அம்மூர் ஏரி, மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம் - பொதுப்பணித்துறையினர் தகவல்
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக நிரம்பிய அம்மு ஏரி நீரை வெளியேற்றும் பொதுப்பணித்துறையினர்.
செட்டிதாங்கள் அருகே அமைந்துள்ள அம்மூர் ஏரியானது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை எட்டி முழுமையாக நிரம்பி உள்ளது.
இதனை அடுத்து உபரி நீரானது மதகுகள் வாயிலாக பொதுப்பணித் துறையினரால் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அந்த ஏரியை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் நிலங்கள் பாசன வசதி பெறும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்