கீழே கிடந்த பணத்தை போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு
வேலூர் மாவட்டம் , சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஏ.டி.எம் . ல் கேபாரற்று இருந்த ரூபாய் 9,500 அவ்வழியாக சென்ற சத்துவாச்சாரி , ராகவேந்திரா நகரைச் சேர்ந்த தமிழரசி த/பெ சந்திரன் என்பவர் கண்டெடுத்து சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் புனிதா அவர்களிடம் ஒப்படைத்தார் . சிறுமியின் இச்செயலை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

மேலும் , பணத்தை தவற விட்டவர் , தகுந்த ஆதாரத்துடன் காவல் நிலையத்தை அணுகி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.புனிதா தெரிவித்தார் .