பிகில் , மாநகரம் , கைதி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல டப்பிங் கலைஞரும் , நடிகருமான அருண் அலெக்சாண்டர் ( 48 ) மாரடைப்பால் காலமானார் . 
சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த பத்து வருடங்களாக டப்பிங் கலைஞராகப் பணியாற்றி வந்துள்ளார் . ' அவதார் ' உள்ளிட்ட உலகப் புகழ்மிக்க படங்களின் முக்கியக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார் . இந்நிலையில் , உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நேற்று அருண் அலெக்ஸாண்டர் உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்குத் திரையுலகினரும் , டப்பிங் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .