சோளிங்கர் பஸ்நிலையம் , அரசுமருத்துவணை ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் அதிக சத்தத்துடன் கூடிய ஆரன்கள் பொருத்தி இயக்குவதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடடையூறு ஏற்படுவதாக ராணிப்பேட்டை கலெக்டருக்கு புகார் சென்றது.

அதன்பேரில் வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் அறிவுறுத்தலின்படி இராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையிலான கோட்ட ஆய்வாளர் முருகேசன் சோளிங்கர் சப் - இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன் , பஷீர் மற்றும் போலீசார் சோளிங்கர் கருமாரி அம்மன் கோயில் பகுதியில் அவ்வழியாக சென்ற தனியார் பேருந்து , அரசு பேருந்து , தனியார் கம்பெனி பேருந்துகள் , வேன்கள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிக சத்தத்துடன் கூடிய ஏர் ஆரன்களை பறிமுதல் செய்தனர் . மேலும் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது .