நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் பதவி ஏற்றுள்ளார். 

கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது . இத்தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வென்று இருந்தனர் . தற்போது பஞ்சாயத்து போர்டு , வார்டு கவுன்சிலர் , மேயர் ஆகிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்று வருகின்றனர் . இந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் மேயர் ஆகப் பதவி ஏற்றுள்ளார். இவர் பி.எஸ்சி கணிதம் முடித்துள்ளார். 

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எஸ்.எஃப்.ஐ உறுப்பினராகவும் தலைவராகவும் எனப் பல பதவிகள் வகித்துள்ளார் . கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே இவர் தேர்தலை வென்றுள்ளார் . இவரது அப்பா ராஜேந்திரன் எலெக்ட்ரீஷியன் ஆகவும் , அம்மா ஸ்ரீலதா எல்ஐசி ஏஜெண்ட் ஆகவும் உள்ளனர் .