கத்தியவாடி மலையிலிருந்து அனுமதியின்றி கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி.
ராணிப்பேட்டை மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையிலிருந்து சிலர் அனுமதியின்றி கல் ஏற்றி செல்வதாக வாலாஜா தாசில்தார் பாக்கியநாதனுக்கு தகவல் கிடைத்ததும் அதன்பேரில் ஜெயலஷ்மி மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு டாக்டரை நிறுத்தி சோதனை செய்யமுயன்றபோது டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.டிராக்டரை சோதனை செய்ததில் அனுமதியின்றி கல்லெடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.