மதுபாட்டில் பதுக்கி விற்ற 3 பெண்கள் கைது ஆற்காடு 
ஆற்காடு டவுன் எஸ்ஐ அருண்ராஜ் குமார் மற்றும் போலீசார் தண்டுக்காரன் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட னர் . அப்போது அங்குள்ள பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது . 

இதையடுத்து தண்டுக்காரன் தெருவை சேர்ந்த சாந்தி ( 50 ) , உமா ( 38 ) , கிருஷ்ணவேணி ( 62 ) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர் . அவர்களிடம் இருந்து மொத்தம் 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் . மேலும் , வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .