ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நகரின் நடுவில் அமைந்துள்ளது இரயில்வே நிலையம் . இதனால் இரு பகுதிகளாக பிரிந்து காட்சியளிக்கிறது . அந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் சாலை இரண்டு கண் சுரங்க பாதையாகும் இதில் சிறிய மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய அளவில் உள்ளது . 

பாதசாரிகளும் இதே பாதையில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது . இதனை தடுக்கும் விதமாக பாதசாரிகள் செல்ல ரூ .3 கோடி மதிப்பீட்டில் புதிய சுரங்க பாதை அமைக்கப்பட்டது . ஆனால் அது இன்றளவும் பயன்பாட்டிற்கு வரவில்லை . சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி மினி கூவம் போல காட்சியளிக்கிறது . 

நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்களின் பயன்பாட்டிற்கு சுரங்க பாதை திறக்கப்பட வேண்டும் என இப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர் .