அரக்கோணம்: நகரில் பெரும்பாலான ஏடிஎம்களில் சர்வர் கோளாறு - ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டம்
அரக்கோணம் நகரத்தில் பல்வேறு  வங்கிகள் செயல்பட்டு வருகிறது, இந்த வங்கிகளில் ஏடிஎம் மையங்கள் சர்வர்கள் முறையாக செயல்படாத காரணத்தால் வங்கிக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர் உடனடியாக வங்கி நிர்வாகங்கள் தங்களது ஏடிஎம் மையங்களை சீர் செய்ய வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர் பொது மக்களுக்கு உடனடியாக வசதி செய்து தரவேண்டும் என அனைத்து சமூக ஆர்வலரும் இதனை கோரிக்கை வைக்கின்றனர்.