ஆற்காடு அருகே காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானர். 
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த உப்புப்பேட்டை , கோவிந்தசாமி முதலியார் தெருவைச் சேர்ந்த அரிதாஸ் மகன் சக்திவேல் ( 44 ) . இவர் பைக்கில் ஆற்காடு நோக்கி வந்து கொண்டிருந்தார். தாஜ்புராவில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது ஆற்காட்டிலிருந்து ஆரணி நோக்கி சென்றுகொண்டிருந்த கார் சக்திவேல் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது . இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

இதுபற்றி தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சக்திவேலின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.