ஆற்காடு: ஆற்காடு பைபாஸ் சாலையில் பார்சல் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து- டிரைவர் படுகாயம்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பைபாஸ் சாலையில் பார்சல் ஏற்றி வந்த வேன் பனிமூட்டம் காரணமாக தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது, டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வண்டியை ஓட்டி வந்தவர் குடியாத்தத்தை சேர்ந்த கந்தசாமி வயது 36அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்றி ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆற்காடு சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.