இரத்தினகிரி அருகே சரக்கு வேன் மோதி காவலர் பலியானார். 

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி எடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு நகர காவல் துறை ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது வேலூரில் இருந்து பூக்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற சரக்கு வேன் அங்கு சோதனை பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் அரங்கம் பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் அயன மூர்த்தி (28) மற்றும் ஆய்வாளர் ஆனந்தன் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரையும் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், காவலர் ஆயன மூர்த்தி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஆனந்தன் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ரத்தினகிரி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.