அணைக்கட்டு அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது . 
அணைக்கட்டு தாலுகா கீழ் கொட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (விவசாயி ) . இவரது மனைவி சங்கீதா ( 25 ) . இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் . இவருக்கு நேற்று முன்தினம் 11.45 மணிக்கு இரவு பிரவச வலி ஏற்பட்டது . இதையடுத்து , 108 கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்கப்பட்டது.

இதையடுத்து , வேப்பங்குப்பம் பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் பூபாலன் , மருத்துவ உதவியாளர் செல்வி ஆகியோர் , வலியால்துடித்த சங்கீதாவை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்றனர் . 

ஒடுகத்தூர் பஸ் நிலையம் அருகே வந்தபோது , சங்கீதாவிற்கு பிரசவ வலி அதிகரித்து . இதனால் வேறு வழியின்றி மருத்துவ உதவியாளர் செல்வி , சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்தார் . அப்போது சங்கீதாவிற்கு 12.50 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது . 

பின்பு தாயும் சேயும் வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்டனர் . தற்போது , தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் .