சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாயைப் பெருக்கும் வகையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன்வளத்துறை சார்பில் நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு திட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் நடந்தது. 

இதில் மீன்வள இணை இயக்குனர் இளங்கோ , உதவி இயக்குனர் குமார் , மீன்துறை உதவி இயக்குநர் கங்காதரன் , மீன்துறை ஆய்வாளர் மெர்சி அமலா மற்றும் பிடிஓ பார்த்தசாரதி , ஜம்பு குளம் கூட்டுறவு சங்கத் தலைவர் பெல்.கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் அடுத்த கோபாலபுரம் கோலா குளத்தில் 5 ஆயிரம் மீன்குஞ்சுகள் , தகரகுப்பம் நடு ஏரியில் 15 ஆயிரம் மீன்குஞ்சுகள் , செங்கல் நத்தம் முத்தாலம்மன் குளத்தில் 5 ஆயிரம் மீன்குஞ்சுகள் , ராமாபுரம் செங்கல்நத்தம் ஏரியில் 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் என மொத்தம் 35 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன .