பாலாற்றில் குளிக்கச் சென்ற 16 வயது சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாதிக்பாஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனிப். கூலித் தொழிலாளியான இவருடைய (16) வயது மகன் முன்வர் மற்றும் இவருடைய நண்பன் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த தப்ரிஸ் (14) ஆகிய இருவரும் மேல்விஷாரம் பகுதியில் செல்லும் பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

குளிக்கச் சென்ற 2 சிறுவர்களும் ஆற்றில் அடித்துச்சென்ற நிலையில் தப்ரீஸ் சில தூரம் ஆற்றில் தண்ணீரில் அடித்துச் சென்ற பின்னர் பொதுமக்கள் அவனை மீட்டு உள்ளனர். ஆனால் முன்வரை மீட்க முடியாமல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான். இவனை கடந்த ஐந்து மணிநேரமாக ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினரால் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆற்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.