வாலாஜா நகராட்சியின் 154 வது ஆண்டு விழா நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது . 
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நக ராட்சி கடந்த 1866 ம் ஆண்டு தமிழகத்தில் முதலாவதாக தொடங்கப்பட்டதாகும் .கடந்த 1960 ம் ஆண்டு நூற் றாண்டுவிழா கொண்டா டப்பட்டது . தொடர்ந்து இந்த நகராட்சிக்கு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் உள்ளிட்ட தலை வர்கள் வருகை தந்து சிறப் பித்தனர் . தொடர்ந்து 154 வது ஆண்டு விழா நேற்று நக ராட்சிசார்பில் கொண்டா டப்பட்டது.

 நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சதிஷ்குமார் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப் புகளை வழங்கினார் . தொடர்ந்து அவர் பேசு கையில் , ' பொது மக்கள் அனை வரும் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி , கடைவரி ஆகியவற்றை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் . தொடர்ந்து பல்வேறு அடிப்படை கட்டமைப் புவசதிகள் செய்யப்பட்டு வருகிறது . ' இவ்வாறு அவர் பேசினார் .

இந்நிகழ்ச்சியில் நக ராட்சி பொறியாளர் நட ராஜன் , பணிமேற்பார்வை யாளர் கமலக்கண்ணன் , துப்புரவு ஆய்வாளர் சந் தான கிருஷ்ணன் , களப் பணி உதவியாளர் மகேந் திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .