ராணிப்பேட்டை, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (20ம் தேதி) அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சிப்காட், முகுந்தராயபுரம், வாலாஜா, ஒழுகூர் துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் சப்ளை இருக்காது.

இதன்படி, லாலா பேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், சிப்காட் பேஸ் 3, அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாராம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, முத்துக்கடை, அவரைக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக்கரர்ஜபுரம், வானாபாடி, செட்டித்தாங்கல், வாலாஜா நகரம், தேவதானம்,

குடிமல்லூர், வன்னி வேடு, சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, ஒழுகூர், வாங் கூர், கரடிகுப்பம், தலங்கை, செங்காடு, எடகுப்பம், படயம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

சோளிங்கர்

சோளிங்கர் துணை மின் நிலையம், மேல் வெங்கடாபுரம் துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் சோளிங்கர், எரும்பி, கல்பட்டு, போளிப் பாக்கம், தப்பூர், பாண்டிய நல்லுார், பாணாவரம், சோம சமுத்திரம், கரிக்கல், மேல் வெங்கடாபுரம், ஜம்புகுளம், கொடைக்கல், மருதாலம், பொன்னை, ஒட்டனேரி, கீரைசாத்து, மிளகாய்குப்பம்,எஸ்என் பாளையம், கேஎன் பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிக்கும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அரக்கோணம்

அரக்கோணம் கோட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம், மோசூர், விண்டர்பேட்டை உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (20ம் தேதி) நடக்கவுள்ளது.

இதையொட்டி அரக். கோணம் நகரம், ஹவுசிங் போர்டு, அசோக் நகர், பழைய பஜார், மோசூர் ரோடு, காந்தி ரோடு,சோளிங்கர் ரோடு, காவனுார், ஆணைப்பாக்கம், அம்பரிஷிபுரம், புளியமங்கலம்,செய்யூர்,கீழ்குப்பம், நகரிகுப்பம், விண்டர்பேட்டை, நாகவேடு, மேல் பாக்கம், நேவல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.