பொங்கல் பரிசுத் தொகுப்பு 2024 | Pongal Gift 2024

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 2 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்குவது வழக்கமாகவுள்ளது. அதே போல் இந்த ஆண்டும் மக்கள் பலர் பொங்கல் பரிசுதொகுபிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பரிசுத் தொகுப்பு

கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்ட அரிசி, வெல்லம், மற்றும் ரூ.1000 போன்ற பொருட்கள் இந்த ஆண்டும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பரிசுத் தொகுப்புடன் பானை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பானையுடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

டோக்கன் தேதி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், 2024 ஜனவரி இரண்டாவது வாரத்தில் (ஜனவரி 8-13 வரை) பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமை தொகை ஒவ்வொருமாதமும் 15-ஆம் தேதி இவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இப்பொழுது பொங்கல் அதே தேதியில் வருவதால் மகளிர் உரிமை தொகை முன்னதாக வர வாய்ப்புள்ளது.