ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லேரி கிராமத்தில், காமராஜபுரம் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடை திருடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை, சிப்காட் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டாஸ்மாக் கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. போலீசார் குடோன் அருகே சென்று பார்த்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் மது போதையில் 9 மது பாட்டில்கள், இரும்பு ராடுடன் பைக்கின் அருகே நின்றிருந்தார்.

அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் காட்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தை சேர்ந்த கரன் (வயது 29) என்பதும், கடையின் பூட்டை இரும்பு ராடால் உடைத்து மதுபாட்டில்கள் திருடியதும் தெரிய வந்தது.

டாஸ்மாக் கடையின் மேலாளர் ரமேஷ் (48) கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.