ராணிப்பேட்டையில் நேற்று இரவு 10 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 12 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விபரம்:-

  • ராணிப்பேட்டையில் 67.8.மி.மீ.
  • பாலாறு அணைக்கட்டு 14.8 மி.மீ.
  • வாலாஜாவில் 42.5 மி.மீ.
  • அம்மூரில் 41 மி.மீ.
  • ஆற்காட்டில் 92.6.மி.மீ.
  • மின்னலில் 8.4 மி.மீ.
  • காவேரிப்பாக்கத்தில் 43 மி.மீ.
  • பனப்பாக்கத்தில் 2.8 மி.மீ.
  • கலவையில் 46.2 மி.மீட்டர்

மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 359.1 மி.மீ., மாவட்ட சராசரி 32.6 5மி.மீ.ஆகும்.


ராணிப்பேட்டையில் பெய்த பலத்த மழையால் விவசாயத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.