குறள் : 1192

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி.


மு.வ உரை :

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.


கலைஞர் உரை :

காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்


சாலமன் பாப்பையா உரை :

அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.


Kural 1192

Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku

Veezhvaar AliKkum Ali


Explanation :

The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.


Horoscope Today: Astrological prediction for August 04, 2023


இன்றைய ராசிப்பலன் - 04.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

04-08-2023, ஆடி 19, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி பகல் 12.45 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் காலை 07.08 வரை பின்பு பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 04.44 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00  


இன்றைய ராசிப்பலன் - 04.08.2023 | Today rasi palan - 04.08.2023

மேஷம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிட்டும்.

ரிஷபம்

இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தினரால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

துலாம்

இன்று உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மனஅமைதி குறையும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

தனுசு

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். 

மகரம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

மீனம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். தொழிலில் பெரிய முதலீடு கொண்டு தொடங்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.



கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026