வாலாஜாவில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகம் எதிரே சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவசங்கரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் விநாயகம், சேட்டு விளக்க உரையாற்றினர். மாநில துணை பொது செயலாளர் பெரு மாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும், காலியாக உள்ள 7,500-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் காலியிடங்களை நிரப்பி, இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசமிட்டனர். 

முடிவில் வாலாஜா உட்கோட்ட தலைவர் த.ப.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் தணிகாசலம் நன்றியுரை ஆற்றினர்.