குறள் : 1026
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
மு.வ உரை :
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
கலைஞர் உரை :
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்
சாலமன் பாப்பையா உரை :
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
Kural 1026
Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha
Illaanmai Aakkik Kolal
Explanation :
A mans true manliness consists in making himself the head and benefactor of his family.
Horoscope Today: Astrological prediction for February 17, 2023
இன்றைய ராசிப்பலன் - 17.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
17-02-2023, மாசி 05, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி இரவு 11.36 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூராடம் நட்சத்திரம் இரவு 08.28 வரை பின்பு உத்திராடம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 08.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 17.02.2023 | Today rasi palan - 17.02.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். சுப காரிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மன நிம்மதியை தரும்.
கன்னி
இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க கூடும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று உறவினர்களின் வருகையால் சந்தோஷம் ஏற்பட்டாலும் நிதானத்துடன் பழகுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பொருளாதார நெருக்கடிகளால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
மீனம்
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001