ராணிப்பேட்டை ஏ.ஜி. தேவாலயம் 7-வது தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 39). இவர், சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள ரெயில்வே பணிமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை பாபு, பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது, மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.