Relationship with another woman: The wife who poured hot water on her husband's private part! Incident near Walajapet!!
வாலாஜாபேட்டை அருகே வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் வெந்நீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட் டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு திடீர் நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 32). இவருக்கு பிரியா (வயது 29) என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கராஜ் பணியாற்றி வருகிறார். சென்னையிலேயே தங்கி வேலை பார்க்கக் கூடிய தங்கராஜ், விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் வேறு ஒரு பெண்ணுடன் தங்கராஜுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பிரியாவுக்கு தெரிய வந்தவுடன் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு வெடித்தது.அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். இதனையடுத்து வேலை முடிந்து நேற்று தங்கராஜ் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவிலும் தங்கராஜ் மற்றும் பிரியா ஆகிய இருவருக்கும் இடையில் தகராறு வெடித்தது.
சண்டை போட்டுவிட்டு தங்கராஜ் உறங்கிவிட்டார். ஆனால் கணவர் மீது பிரியா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் வெந்நீரை கொதிக்க வைத்த பிரியா, தனது கணவரின் அந்தரங்க உறுப்பில் வெந்நீரை ஊற்றினார். வலியில் தங்கராஜ் கதறிஅழுதார். சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள், அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து தங்கராஜ் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு 30 சதவீத தீக்காயத்துடன் தங்கரா ஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கணவரின் அந்தரங்க உறுப்பில் மனைவி வெந்நீரை ஊற்றிய இந்தசம் பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.