👉 1851ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.


👉 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி எக்கோ ஐ என்ற முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

👉 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ஐ.பி.எம். நிறுவனம் தனி மேசைக் கணினியை வெளியிட்டது.

👉 1877ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன், போனாகிராபி கருவியைக் கண்டுபிடித்து முதல் ஒளிப்பதிவு செய்து காண்பித்தார்.

👉 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குவாண்டம் விசையியலில் முக்கிய பங்காற்றிய எர்வின் சுரோடிங்கர் இங்கிலாந்தில் பிறந்தார்.

👉 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தமிழறிஞர் தமிழண்ணல் என்கிற இராம.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தார்.

👉 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவரான வில்லியம் ஷாக்லி மறைந்தார்.


முக்கிய தினம் :-


சர்வதேச இளைஞர் தினம்

👉 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சனைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது.

👉 இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. எனவே இத்தினம் 2000ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.


உலக யானைகள் தினம்

👉 ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் காடுகளில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த யானைகளை நாம் இப்போது கோவில்களிலும், சர்கஸிலும் தான் காணமுடிகிறது. இன்று, பல யானைகள் தந்தத்திற்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. நம் நாட்டின் செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் யானைகளின் இனம் அழிந்து வருவதை பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-


விக்கிரம் சாராபாய்

👉 இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்கிரம் ஆம்பாலால் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.

👉 சிறுவயதிலிருந்தே கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இங்கிலாந்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார்.

👉 இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது.

👉 இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் இவரே. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்மபூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

👉 இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கல்வியின் மேம்பாட்டுக்காக கடுமையாக பாடுபட்ட விக்ரம் சாராபாய் 52-வது வயதில் (1971) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.

1099 – முதலாம் சிலுவைப் போர்: சிலுவைப் போர்வீரர்கள் பாத்திமக் கலிபகத்தைத் தோற்கடித்தனர்.

1121 – ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில் செல்யூக்குகளை வென்றனர்.

1323 – சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./

1492 – கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதல் பயணத்தின் போது கேனரி தீவுகள் வந்தடைந்தார்.

1499 – வெனிசியர்களுக்கும் உதுமானியர்யர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.

1765 – இந்தியத் துணைக்கண்டத்தில் கம்பனி ஆட்சியைக் காலூன்ற வழி வகுக்கப்பட்ட அலகாபாத் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1812 – இலங்கையில் பாப்திச சபை நிறுவப்பட்டது.[1]

1812 – கொழும்பு நூலகம் அமைக்கப்பட்டது.[1]

1851 – ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1865 – பிரித்தானிய மருத்துவர் ஜோசப் லிஸ்டர் தனது முதலாவது நோய்நுண்மத் தடுப்பு முறை அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

1914 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஆத்திரியா-அங்கேரி மீது போர் தொடுத்தது.

1944 – நாட்சி செருமனிப் படைகள் போலந்தில் வோலா என்ற இடத்தில் நடத்திய படுகொலைகள் முடிவுக்கு வந்தன. 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

1950 – கொரியப் போர்: அமெரிக்க போர்க்கைதிகள் 75 பேர் வடகொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1952 – மாஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

1953 – கிரேக்கத்தில் இயோனியத் தீவுகளில் 7.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 445 முதல் 800 பேர் வரை உயிரிழந்தனர்.

1953 – சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது ஐதரசன் குண்டு சோதனையை நடத்தியது.

1960 – எக்கோ I என்ற நாசாவின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.

1976 – லெபனான் உள்நாட்டுப் போர்: தெல் அல்-சாத்தார் என்ற இடத்தில் 1,000 முதல் 3,500 வரையான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

1977 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.

1985 – சப்பானில் விமானம் ஒன்று ஒசுத்தாக்கா மலையில் மோதியதில் 520 பேர் உயிரிழந்தனர்.

1985 – ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1990 – அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் மிகப்பெரியதும், முழுமையானதுமான டைரனொசோரசு என்னும் டைனசோரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

1990 – வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2000 – கூர்ஸ்க் என்ற உருசியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்சு கடலில் மூழ்கியது.

2005 – இலங்கைவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.

2005 – மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.

2005 – இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

2006 – இலங்கைத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2015 – சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1591 – லுயீஸ் டி மரிலாக், பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவிய கத்தோலிக்கப் புனிதர் (இ. 1660)

1762 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ் (இ. 1830)

1831 – எலனா பிளவாத்ஸ்கி, உருசிய இறையியலாளர் (இ. 1891)

1887 – எர்வின் சுரோடிங்கர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய இயற்பியலாளர் (இ. 1961)

1892 – சீர்காழி இரா. அரங்கநாதன், இந்தியக் கணிதவியலாளர், நூலகவியலாளர் (இ. 1972)

1892 – க. அ. நீலகண்ட சாத்திரி, இந்திய வரலாற்றாளர் (இ. 1975)

1897 – ஆட்டோ சுத்ரூவ, உக்ரேனிய வானியலாளர் (இ. 1963)

1907 – மறை. திருநாவுக்கரசு, தமிழறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1983)

1919 – மார்கரெட் பர்பிட்ஜ், ஆங்கிலேய-அமெரிக்க வானியற்பியலாளர்

1919 – விக்கிரம் சாராபாய், இந்திய இயற்பியலாளர் (இ. 1971)

1920 – ப. சிங்காரம், தமிழக எழுத்தாளர் (இ. 1997)

1924 – சியா-உல்-ஹக், பாக்கித்தானின் 6வது அரசுத்தலைவர் (இ. 1988)

1927 – ஏ. திருநாவுக்கரசு, தமிழக எழுத்தாளர்

1928 – தமிழண்ணல், தமிழறிஞர் (இ. 2015)

1930 – ஜார்ஜ் சொரெஸ், அங்கேரிய-அமெரிக்கத் தொழிலதிபர்

1939 – சுசில் கொய்ராலா, நேபாளத்தின் 37வது பிரதமர் (இ. 2016)

1940 – குமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 2000)

1948 – சித்தராமையா, கருநாடகத்தின் 22வது முதல்வர்

1949 – நரேந்திர சிங் நேகி, உத்தராகண்ட பாடகர்

1952 – சீத்தாராம் யெச்சூரி, இந்திய அரசியல்வாதி

1953 – டிராட்ஸ்கி மருது, தமிழக ஓவியர்

1954 – பிரான்சுவா ஆலந்து, பிரான்சின் 24வது அரசுத்தலைவர்

1956 – சிதத் வெத்தமுனி, இலங்கைத் துடுப்பாளர்

1971 – பீட் சாம்ப்ரஸ், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்

1990 – மரியோ பலோட்டெலி, இத்தாலிய காற்பந்தாட்ட வீரர்

இன்றைய இறப்புகள்


கிமு 30 – ஏழாம் கிளியோபாட்ரா, எகிப்திய அரசி (பி. கிமு 69)

1602 – அபுல் ஃபசல், முகலாய வரலாற்றாளர் (பி. 1551)

1638 – ஜோகனஸ் அல்தூசியஸ், செருமானிய மெய்யியலாளர் (பி. 1557)

1827 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (பி. 1757)

1848 – ஜார்ஜ் ஸ்டீபென்சன், ஆங்கிலேய பொறியியலாளர் (பி. 1781)

1900 – ஜேம்சு எட்வார்டு கீலர், அமெரிக்க வானியலாளர் (பி. 1857)

1920 – எர்மேன் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1854)

1941 – வெல்லிங்டன் பிரபு, கனடாவின் 56வது ஆளுநர் (பி. 1866)

1955 – தாமசு மாண், நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (பி. 1875)

1964 – இயான் பிளெமிங், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1908)

1979 – ஏ. வி. மெய்யப்பன், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1907)

1989 – வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1910)

1996 – விக்தர் அம்பர்த்சுமியான், சியார்ச்சிய-ஆர்மீனிய வானியற்பியலாளர் (பி. 1908)

2005 – ரேலங்கி செல்வராஜா, இலங்கை ஊடகவியலாளர், நடிகை (பி. 1960)

2006 – கேதீஸ் லோகநாதன், இலங்கை அரசியல் செயற்பாட்டாளர், மனித உரிமை ஆர்வலர் (பி. 1952)

2021 – இசுடீவன் வைசுனெர், இசுரேலிய இயற்பியலாளர் (பி. 1942)

இன்றைய சிறப்பு நாள்


அனைத்துலக இளையோர் நாள் (ஐநா)

உலக யானைகள் தினம்

உலக நூலக தினம்