ராணிப்பேட்டை அருகே மாந்தாங்கல் மோட்டூர் பஜனைக் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(32), இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே இருந்தார்.
அப்போது பைக்கில் வந்த சென்னை வடபழனியை சேர்ந்த சத்தியசீலன் (60) என்பவர் கணேஷிடம், 'உனதுமனை வியை பார்க்க வேண்டும்' எனக்கூறினாராம். அதற்கு கணேஷ், ‘எனது மனைவியிடம் பேச வேண்டாம்' எனக்கூறினாராம்.
இதில் ஆத்திரமடைந்த சத்தியசீலன், கணேஷை ஆபாசமாக பேசி, கத்தியால் கணேஷின் தலை மற்றும் தோள்பட்டை மற்றும் முதுகில் வெட்டி யுள்ளார்.
இதுதொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் சத்தியசீலனை கடந்த 17ம் தேதி இரவு கைது செய்தனர்.